Asian Judo Junior Championships : ஆசிய ஜூடோ ஜூனியர் சாம்பியன் போட்டியின் முதல் நாளில் இந்தியாவிற்கு தங்கம்

File photo.

பாங்காக்: Asian Judo Junior Championships 2022 : தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைப்பெற்ற வரும் ஆசிய ஜூடோ ஜூனியர் சாம்பியன் போட்டியின் முதல் நாளில் இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 6 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைப்பெற்ற வரும் ஆசிய ஜூடோ ஜூனியர் சாம்பியன்போட்டியின் முதல் நாளில் இந்தியாவிற்கு 2 தங்கம் (2 gold) உள்பட 1 வெள்ளி 3 வெண்கலப் பதக்கங்களை வீரர், வீராங்கணைகள் வென்றுள்ளனர்.

ஜூலை 21-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறும் ஜூடோ போட்டிகளில் முதல் நாளில் இந்தியாவைச் சேர்ந்த வின் தோய் சனம் 57 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

மற்ற வீரர், வீராங்கணைகள் 1 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளனர். 15 நாடுகளிலிருந்து (From 15 countries) 91 ஆண்கள் 72 பெண்கள் உள்பட 163 வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டுள்ள ஆசிய ஜூடோ ஜூனியர் சாம்பியன்போட்டியில் முதல் நாளிலியே இந்திய வீரர், வீராங்கணைகள் தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்றுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆண்களுக்கு 60, 66, 73, 81, 90, -100, +100 கிலோ ஆகிய பிரிவுகளிலும், பெண்களுக்கு 48, 52, 57, 60, 63, -78, +78 கிலோ பிரிவுகளிலும் ஜூடோ போட்டிகள் 2 நாள் நடைபெறுகின்றன.