Somalia Bomb Attack : சோமாலியாவில் கல்வித்துறை அலுவலகம் அருகே 2 கார் குண்டுவெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள கல்வித் துறை அலுவலகம் அருகே நேற்று இரவு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், சுற்றி இருந்த 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

TOPSHOT - EDITORS NOTE: Graphic content / A picture taken on October 15, 2017 shows a general view of the scene of the explosion of a truck bomb in the centre of Mogadishu. A truck bomb exploded outside a hotel at a busy junction in Somalia's capital Mogadishu on October 14, 2017 causing widespread devastation that left at least 20 dead, with the toll likely to rise. / AFP PHOTO / Mohamed ABDIWAHAB (Photo credit should read MOHAMED ABDIWAHAB/AFP/Getty Images)

சோமாலியா: Somalia Bomb Attack: சோமாலியாவில் நேற்றிரவு ரத்த வெள்ளம் பாய்ந்துள்ளது. கல்வித்துறை அலுவலகம் அருகே வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள கல்வித் துறை அலுவலகம் அருகே (Near the Department of Education office in Mogadishu, the capital of Somalia) நேற்று இரவு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், சுற்றி இருந்த 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்கள் அதிகம் கூடும் பகுதியை குறிவைத்து 2 கார்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. வெடிகுண்டு வெடித்த தருணத்தில் கல்வித் துறையைச் சுற்றி ரத்த வெள்ளம் பாய்ந்தது. வீடுகள், கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்தன. ஜன்னல், கதவுகள் உடைந்துள்ளன. சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ள நிலையில், பலர் கை, கால்களை இழந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2017-க்குப் பிறகு நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். 2017 ஆம் ஆண்டு இதே இடத்தில் லாரி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

நேற்றைய சம்பவத்திற்கு அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு (Al-Shabaab is a terrorist organization) மீது சோமாலிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது கிழக்கு ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் செயல்படும் சோமாலி இஸ்லாமிய அடிப்படைவாத போராளிக் குழு. மேலும், இது அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது. ஆனால் இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இது மிக மோசமான தாக்குதல் என்று வர்ணிக்கப்பட்டது.

சோமாலியாவில் அரசுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. அல் ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பை ஒடுக்க அரசு பல வழிகளில் போராடி வருகிறது (The government is struggling in many ways to suppress the terrorist organization). பதிலுக்கு பயங்கரவாத அமைப்பினர் ஆங்காங்கே தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் குறிவைத்து குண்டு வீசி தாக்கப்படுகின்றன.