Seizure of 910 Grams gold: சென்னை விமான நிலையத்தில் ரூ.40.53 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை: Seizure of 910 Grams gold worth N0.53 Lakhs and mobile phones, cigarettes wortht 3.15 Lakhs by Chennai Air Customs. சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.40.53 லட்சம் மதிப்புள்ள 910 கிராம் தங்கம், 3.15 லட்சம் மதிப்புள்ள செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் எம். மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 28.10.2022 அன்று துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணி ஒருவரை சோதனை செய்தபோது, அவர் ரூ.17.15 லட்சம் மதிப்புள்ள 385 கிராம் தங்க கட்டியை உலோகத் தகடுகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்தனர். மேலும் அவரது பைகளிலிருந்து 15 செல்பேசிகளும் 9000 சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 3.15 லட்சம் ஆகும்.

இதே போல் 29.10. 2022 அன்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் துபாயிலிருந்து சென்னை வந்த மற்றொரு பயணியை சோதனை செய்தபோது ரூ. 23.38 லட்சம் மதிப்புள்ள 525 கிராம் எடையுள்ள தங்கம் பசை வடிவில் அவரது உடலில் மறைத்து எடுத்துவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து இரு வேறு சோதனைகளில் மொத்தம் ரூ.40.53 லட்சம் மதிப்புள்ள 910 கிராம் தங்கம், 3.15 லட்சம் மதிப்புள்ள செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது என சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் எம். மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.