Plane Crash: விமான கண்காட்சியில் ராணுவ விமானங்கள் நடுவானில் மோதல்: 6 பேர் பலி

டெக்சாஸ்: Six feared dead after military planes collide midair at Dallas airshow, probe underway. அமெரிக்காவில் டல்லாஸ் விமான கண்காட்சியில் ராணுவ விமானங்கள் நடுவானில் மோதியதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் நடைபெற்ற விமானக் காட்சியின் போது, ​​பி-17 கனரக குண்டுவீச்சு விமானம் மற்றொரு விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் பிரீமியர் இரண்டாம் உலகப் போர் ஏர்ஷோ நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியின் படைவீரர் தின வார இறுதி என்று கூறப்படுகிறது. இதில் 40 க்கும் மேற்பட்ட இரண்டாம் உலகப் போர் கால விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது போயிங் பி-17ஜி மற்றும் பெல் பி-63எஃப் விமானங்கள் நடுவானில்வேகமாக கீழே இறங்குவதற்கு முன்பு மோதியதால் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விழுந்த இடத்தில் கரும்புகை கிளம்பியதையடுத்து அங்கு பதற்றம் நிலவியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

விபத்துக்குள்ளான B-17 விமானம் ஒரு மகத்தான நான்கு எஞ்சின் குண்டுவீச்சு என்றும், இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க வான்படையின் மூலக்கல்லாக இருந்தது என்றும் அமெரிக்க ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இரண்டாம் உலகப் போரின் முடிவில் பெரும்பாலான B-17 விமானங்கள் அகற்றப்பட்டன. இப்போது ஒரு சில மட்டுமே எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.