Queen Elizabeth II : இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம்

லண்டன் : Queen Elizabeth II laid to rest at Windsor Castle : மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் திங்கள்கிழமை, அவரது கணவரின் கல்லறை அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது . திங்கள்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட உலக நாடுகளைச் சேர்ந்த 500 தலைவர்கள் பங்கேற்றனர் . மகாராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல் நலக் குறைவு காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள தனது பால்மரால் மாளிகையில் கடந்த 8 ஆம் தேதி காலமானார் . அங்கிருந்து அவரது உடல் லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து வரப்பட் டது. பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் வளாக‌த்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக 5 நாள்கள் வைக்கப்பட்டது.

நாடு முழுவதிலிருமிருந்து குவிந்த பொதுமக்கள் பல மணி நேரம் வரை காத்திருந்து மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் (Tributes were paid to the Queen’s body). அஞ்சலி செலுத்தும் திங்கள்கிழமை காலை வரை தொடர்ந்தது . பின்னர் , அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கிற்காக அங்கிருந்து பீரங்கி வண்டியில் மகாராணியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி ஏற்றப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது . கடற்படையைச் சேர்ந்த 142 மாலுமிகள் இந்த பீரங்கி வண்டியை வழிநடத்திச் சென்றனர் . பீரங்கி வண்டிக்கு பின்னால் அரசர் சார்லஸ் , அவரது மனைவி சுமீலா மற்றும் அரச குடும்பத்து வாரிசுகள் நடந்து சென்றனர் . வழி நெடுக பொதுமக்கள் திரளாக‌ நின்று மகாராணிக்கு பிரியாவிடை அளித்தனர் . மத்திய லண்டனில் வெலிங்டன் வளைவு வரை பீரங்கி வண்டியில் கொண்டுசெல்லப்பட்ட மகாராணியின் உடல், அங்கிருந்து அரண்மனை வாகனத்துக்கு மாற்றப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயதிற்குப் புறப்பட்டது.

உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் அந்த தேவாலயத்தில் கேண்டர்பரி ஆர்ச் பிஷப் தலைமையில் பிரார்த்தனை சடங்குகள் நடை பெற்றன (A prayer service was held in the church led by the Archbishop of Canterbury). இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , அவரது மனைவி ஜில் பைடன் , பிரான்ஸ் அதிபர் இமானு வல் மேக்ரான் மற்றும் உலக நாடுக ளைச் சேர்ந்த 500 தலைவர்கள் உள் பட 2,000 பேர் பங்கேற்றனர் . பின்னர் , அங்கிருந்து சுமார் . 40 கி.மீ. தொலைவில் உள்ள விண்ட்ஸர் கோட்டைக்கு மகாராணியின் உடல் வாகனத்தில் எடுத்துச் செல்ல‌ப்பட்டது . வழிநெடுகிலும் காத்திருந்த பொதுமக்கள் மறைந்த மகராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

விண்ட்ஸர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் மகாராணியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மீது இருந்த சிலுவைக் கோளம், செங்கோல் நீக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்து தேசியக் கீதம் பாடப்பட்டு, கணவரின் கல்லறை அருகே இரண்டாம் மகராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது, இங்கிலாந்து முழுவதும் உள்ளவர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர் (People across the UK held a 2 minute silence).