2 died : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த‌ 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி: 2 பேர் பலி

சென்னை : 4 members of the same family tried to commit suicide by drinking poison: கடன் தொல்லையால் , சென்னை அருகே நீலாங்கரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றனர் . இச் சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர் .

நீலாங்கரை செங்கேணி அம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் ராம்குமார் (35) (Ramkumar lives in a rented house). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆய்வக பராம ரிப்பு பொறியாளராக பணியாற்றி வந்தார் . ராம்குமாரின் தாயார் மீனாட்சி (58), அவர் சகோதரி சந்தானம்மாரி (40) , மகள் மோகனப்பிரியா (20) . இவர் சிறிது மனவளர்ச்சி குன்றியவர் . இவர்கள்அனைவரும் ஒரே குடும்பமாக அங்கு வசித்து வந்தனர்.

இந் நிலையில் திங்கள்கிழமை நண்பகல் ராம்குமார் வீட்டில் இருந்து கூச்சலிடும் சத்தம் கேட்டுள்ளது . இதைக் கேட்ட அந்தப் பகுதி மக்கள் , ராம்குமார் வீட்டுக்கு சென்று பார்த்தனர் . அப்போது அங்கு 4 பேரும் விஷம் சாப்பிட்டு, வாயில் நுரை தள்ளிய‌ நிலையில் கிடப்பதை தள்ளிய பார்த்து அதிர்ச்சியடைந்தனர் . தகவலறிந்த நீலாங்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்து, உடனடியாக‌ 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தனர் (108 ambulance was called). ஆனால் அதற்குள் சந்தானமாரியும் , மோகனப்பிரியாவும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராம்குமாரும், மீனாட்சியும் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர் . இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு (Neelankarai police registered a case) செய்து , விசாரணையை தொடங்கினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ராம்குமார் வங்கிகளில் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதும் , வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாமல் ராம்குமார் சிரமத்தில் இருந்ததும் , அதே நேரத்தில் வங்கி ஊழியர்கள் ராம்குமாரிடம் கடன் கொடுத்தவர்கள் கடனையும் , வட்டியையும் கேட்டு தொடர்ந்து அவரை நெருக்கடிக்கு உள்ளாகியதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.