Pilot Threatens To Crash Plane: வால்மார்ட் கட்டிடத்திற்கு விமானி மிரட்டல்; அமெரிக்காவில் உச்சக்கட்ட பரபரப்பு

வாஷிங்டன்: Pilot Threatens To Crash Plane Into Walmart. அமெரிக்காவில் மிசிசிப்பியில் உள்ள வால்மார்ட் மீது விமானத்தை மோத விடுவதாக விமானி மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பி, டுபெலோவில் உள்ள வால்மார்ட் கட்டிடத்தின் மீது இந்த விமானத்தை வேண்டுமென்றே மோதி விடுவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த அச்சுறுத்தியதை அடுத்து, அங்கிருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக டுபெலோ காவல் துறை தெரிவித்துள்ளது.

இன்று சுமார் 05:00 மணியளவில் ஒரு விமானத்தின் பைலட் டுபெலோ மீது பறப்பதாகத் டுபெலோ காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் E911 வகை விமானத்தின் 29 வயதுடைய விமானியிடம் தொடர்புகொண்டனர். அப்போது அந்த விமானிவெஸ்ட் மெயினில் உள்ள வால்மார்ட்டில் வேண்டுமென்றே மோதிவிடுவதாகவும் மிரட்டுவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே “டிபிடி வால்-மார்ட் வெஸ்ட் மற்றும் வெஸ்ட் மெயினில் டாட்ஜஸ் உடன் இணைந்து பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. விமானயிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து அவசர சேவைகளும் விழிப்புடன் இருக்குமாறும், சகஜ நிலைக்கு திரும்பும் வரை மக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த மிரட்டலால் அப்பகுதியில் ஆபத்து பெருமளவில் உள்ளதாகவும், மேலும் தகவல்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

தற்போது காவல் துறைகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் எல்லா இடங்களிலும் தயார் நிலையில் உள்ளன.

டுபெலோ விமான நிலையத்தில் இருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 90 என்ற சிறிய விமானத்தை விமானி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஒன்பது இருக்கைகள் கொண்ட இந்த விமானம் இரண்டு என்ஜின்கள் கொண்டது.