அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா: தென் கொரியா தகவல்

north-korea
அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா

North Korea: வடகொரியா பல்வேறு பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்ட போதிலும் இந்த ஆண்டு தனது ஏவுகணை சோதனையை மேம்படுத்துவதை மேலும் இரட்டிப்பாக்கியுள்ளது.

இந்த நிலையில், வட கொரியா இன்று தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் குறைந்தது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, “சாத்தியமான பாலிஸ்டிக் ஏவுகணை வட கொரியாவிலிருந்து ஏவப்பட்டதாக ஜப்பானிய கடலோர காவல்படையும் இதனை உறுதிபடுத்தியுள்ளது.

தென் கொரியாவும் அமெரிக்காவும் 100,000 டன் அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். ரொனால்ட் ரீகனில் பெரிய அளவிலான மூன்று நாள் பயிற்சிகளை முடித்த பின்னர் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு வடகொரியா நீண்ட காலமாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் தற்போது ராணுவ பயிற்சியை இரு நாடுகளும் முடித்த பிறகு வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

North Korea Launches Unidentified Ballistic Missile: Seoul

இதையும் படிங்க: Nalini Petition: முருகனுக்கு பரோல் வழங்கக் கோரிய நளினியின் மனு நிராகரிப்பு