நியூசிலாந்து: உலகத்திலேயே நியூசிலாந்து (New Year 2023 Born On Newzealnd) நாட்டில்தான் முதன் முதலாக புத்தாண்டு பிறந்துள்ளது. இதன் பின்னரே மற்ற நாடுகளில் புத்தாண்டு பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு என்றாலே ஒவ்வொரு நாடுகளிலும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஒன்றாக திரண்டு புத்தாண்டை வானவேடிக்கையுடன் வரவேற்பார்கள். அதே போன்று இளைஞர்கள், பெண்கள் நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் பார்ப்போம்.
இந்நிலையில், உலகத்திலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதன் முறையாக புத்தாண்டு 2023 பிறந்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள மக்கள் அனைவரும் வானவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
மேலும் உலகின் முதல் இடமாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற 2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.