Johnny Depp and Amber Heard Divorce Case: ஒரு வழியாக முடிவுற்ற ஜானிடெப், ஆம்பர்ஹெர்ட் வழக்கு

ஹாலிவுட் பிரபலங்களா ஜானிடெப் மற்றும் ஆம்பர்ஹெட் (Johnny Depp and Amber Heard Divorce Case) கடந்த 2015ம் ஆண்டு திருணம் செய்து கொண்ட நிலையில் ஒரு ஆண்டிலேயே இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிய நேரிட்டது.

இதனால் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அனைத்து வழக்குகளையும் சமரச தீர்வு அடிப்படையில் இருவரும் முடித்துக்கொள்வதாக ஆம்பர் அறிவித்ததை, ஜானிடெப்பின் வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இதனால் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் ஹீரோவான ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் உடனான அனைத்து வழக்குகளையும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்கி முடித்துக்கொள்வதாக இருவரும் கூறியிருப்பது ஹாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவிக்கும் அவதார் 2 படம்: உலக முழுவதும் வெளியான அவதார் 2 திரைப்படம் கடந்த சில நாட்களாக வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதுவரையில் 4 ஆயிரம் கோடியை தொட்டு விட்டதாக கூறப்படுகிறது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி பல ஆயிரம் கோடியை சம்பாதித்தது. தற்போது 13 ஆண்டுகளை கழித்து மீண்டும் அவதார் படத்தின் 2ம் பாகம் அவதார் தி வே ஆப் வாட்டர் என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமின்றி, இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:You Are Looking Beautiful: நீங்க ரொம்ப அழகு.. சென்னை மேயர் பிரியாவை பாராட்டிய முதியவர்