அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

Indian rupee slumps : உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில், உலகம் முழுவதிலும் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக அதிகரித்து வருகிறது.

மேலும், பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இங்கிலாந்திலும் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன. சீனாவிலும் கொரோனா பாதிப்பினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த மார்ச் மாதத்தில் 77 ஆக சரிவடைந்தது. திங்களன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. ரூபாய் மதிப்பு 51 காசுகள் சரிந்து ஒரு டாலர் விலை 77.41 ஆக சரிந்தது. கடந்த மார்ச் மார்ச் மாதத்தில் ரூபாயின் மதிப்பி 76.98 என்ற அளவில் இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தடுமாறி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் அழியும் – அண்ணாமலை