திருப்பதியில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறும் பத்மாவதி திருக்கல்யாணம்

பத்மாவதி திருக்கல்யாணம்
பத்மாவதி திருக்கல்யாணம்

Tirumala Tirupati: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நாராயணகிரி பகுதியில் பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் நடத்தப்படாமல் இருந்த இந்த பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள், இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முதல் நாளான நாளை 10-ந்தேதி பெருமாள் திருமண மண்டபத்திற்கு கஜ வாகனத்திலும், 2-ம் நாள் அஸ்வ வாகனத்திலும், 3-ம் நாள் கருட வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் எழுந்தருள்வார்.

இதில் ஊஞ்சல் சேவைகளும், புராண, இதிகாச சொற்பொழிவுகளும் நடைபெறும். பத்மாவதி திருக்கல்யாண உற்சவத்தையொட்டி தினமும் நடைபெறும் ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ரதீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2 டோஸ் தடுப்பூசிக்கும் ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்துங்கள் – மத்திய சுகாதார அமைச்சகம்