Gotabaya Rajapaksa : கோத்தபய ராஜபட்சே தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார்: அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா

தாய்லாந்து: Gotabaya Rajapaksa to stay in Thailand temporarily: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்சே தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என்று அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்தார்

நிரந்தர அகதிகளை அடைவதற்கான தகுதி பெரும் வரையும், மூன்றாவது நாட்டைக் கண்டுபிடிக்கும் வரையும், தற்காலிகமாக தாய்லாந்து (Thailand) தீவு நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்டதால், கோத்த‌பய ராஜபட்சே இப்போது தாய்லாந்தில் தங்குவார். தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா மனிதாபிமான காரணங்களுக்காக பிரச்னையில் உள்ள முன்னாள் அதிபர் தற்காலிகமாக தங்கியிருப்பதை உறுதி செய்தார். கோத்த‌பய ராஜபட்சே இன்னும் ராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பதால், அவர் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்க முடியும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு எதிரான தீவிர எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோத்தபய ராஜபட்சே ஜூலை 13 தேதியன்று இலங்கையை விட்டு வெளியேறினார் (Gotabaya Rajapatse left Sri Lanka on 13th July). எதிர்ப்பாளர்கள் அவரது அதிபர் மாளிகைக்குள் நுழைந்து, அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர். இதனையடுத்து முதலில் மாலத்தீவிற்கு சென்ற‌ அவர், பின்னர் சமூக வருகை விசாவில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இருந்து இலங்கையின் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதியின் கொள்கைகளால் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிகளின் பிடியில் இலங்கை இன்னமும் உள்ளது. 5.7 மில்லியன் மக்களுக்கு “உடனடி மனிதாபிமான உதவி தேவை” என்று எச்சரித்த ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின்படி, உணவு, பெட்ரோல் மற்றும் மருந்துகள் போன்ற தேவைகளின் கடுமையான பற்றாக்குறையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே மற்றும் பசில் ராஜபட்சேவுக்கு (Mahinda Rajapatse and Basil Rajapatse) விதிக்கப்பட்ட பயணத் தடையை செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. வெகுஜன அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் ஜூலை மாதம் இலங்கையை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருந்த கோத்தபய‌ ராஜபட்சே, சிங்கப்பூர் விசா வியாழக்கிழமை காலாவதியானதால் தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

தாய்லாந்து பிரதமர், மனிதாபிமான காரணங்களுக்காக 73 வயதான இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்சே தாய்லாந்திற்கு தற்காலிக விஜயத்தை உறுதிப்படுத்தினார், மேலும் வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் போது தாய்லாந்தில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தாக தெரிவித்துள்ளார். இலங்கையின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் கோத்த‌பய ராஜபட்சே தனது சமூக வருகை விசா காலாவதியானதை அடுத்து சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக (Departed from Singapore) நகர குடிவரவு அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இது ஒரு மனிதாபிமான அடிப்படையில் கோத்தபய ராஜபட்சே தற்காலிக தங்க வாய்ப்பு அளித்துள்ளோம். எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் இங்கு அனுமதிக்கப்படாது, இது அவருக்கு தஞ்சம் புகுவதற்கு உதவி புரிந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளதாக பாங்காக் போஸ்ட் (Bangkok Post) செய்தித்தாள் தெரிவித்துள்ளது. தற்போது தஞ்சம் புகுந்துள்ள கோத்தபய ராஜபட்சே தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கலாம் என கூறப்படுகிறது.