Case filed against Viruman director : விருமன் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு: நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: Case filed against director, producer of Viruman film: Hearing in court today : விருமன் படத்தின் இயக்குநர் முத்தையா, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா மீது துரை என்பவர் தொடத்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.

நடிகர் கார்த்திக் நடித்த விருமன் (Viruman played by actor Karthik) திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. இந்த நிலையில் ஆக. 10 ஆம் தேதி விருமன் படத்தின் கதை தன்னுடையது. இதனை அந்த படத்தின் இயக்குநர் முத்தையா திருடி உள்ளார் என உதவி இயக்குநர் துரை என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து விருமன் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

நடிகர் கார்த்திக் நடித்து வெளியாக உள்ள விருமன் படத்தை இயக்குநர் முத்தையா என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தை நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவுக்கு (Actor Surya, actress Jyothika) சொந்தமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் கதை தன்னுடைய என்று கூறியுள்ள துணை இயக்குநர் துரை என்பவர், இது தொடர்பாக அண்மையில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதன்மை இயக்குநரான சுந்தர பாண்டியன் என்பவரை சந்திக்க முயன்றதாகவும், அது முடியாமல் போனதை அடுத்து, நீதிமன்றத்தின் படி ஏறி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே நடிகர் கார்த்தி நடித்து வெளியான கொம்பன் படத்தை முத்தையா இயக்கி இருந்தார் (Komban was directed by Muttiah). இந்தப்பட வெளியாக பெரும் வெற்றி பெற்றது. அந்த கதையும் தன்னுடையதுதான் என்று அப்போதும் இதே துணை இயக்குநர் துரை கூறியதையடுத்து, இது தொடர்பாக பஞ்சாயத்து பேசப்பட்டு, திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று வெளியாக இருந்த விருமன் படத்தின் மீதான வழுக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதால் திரைப்படம் இன்று வெளியாவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

நீதிமன்றத்தில் இந்த திரைப்படம் தொடர்பான விசாரணை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதால், அதிகாலையில் வெளியாக இருந்த விருமன் படம் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு வெளியாக (The film will be released after the court’s decision) உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு படக்குழுவினருக்கு எதிராக வந்தால் படம் வெளியாவதற்கு தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. துணை இயக்குநர் துரை தொடர்ந்த வழக்கால், முதல் நாளில் தங்களின் விரும்பான நடிகர் கார்த்திக் நடித்த திரைப்படத்தை முதல் நாள், முதல் காட்சியை காண முடியாமல் போனதற்காக அவர்களது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளது. இது போன்ற பிரச்னைகள் எழும் போது அதனை படம் வெளி வருவதற்கு முன்பு படக்குழுவினர் தீர்த்து கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றிற்கு பிறகு பெரும் பொருள் செலவிற்கு பிறகு திரைப்படங்கள் தயாரித்து வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டால் அது தமிழ் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு ஆரோக்யமானது அல்ல (Not healthy for the growth of the Tamil film industry). வெளிவந்து சரியாக ஓடாத பல படங்கள் உள்ள நிலையில், பிரபல‌ நடிகர்கள் நடித்து, வெளியானால், நன்றாக ஓடும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ள திரைப்படங்களுக்கு இது போன்ற நிலை ஏற்படுவது தமிழ் திரைப்படத்துறைக்கு உகந்தது அல்ல. இயக்குநர் முத்தையா, படத்தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இந்த பிரச்னையை வியாழக்கிழமை முன்பே தீர்த்துக் கொண்டிருந்த வேண்டும். நீதிமன்றத்தின் பிரச்னையால் படம் காண ஆவலாக இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விருமன் படத்தில் நடிகர் கார்த்தி உடன், இயக்குநர் சங்கரின் மகள் அதீதி கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.