G20 summit begins today, PM Modi to attend : இந்தோனேஷியா பாலியில் ஜி 20 மாநாடு இன்று தொடக்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு

புது டெல்லி: G20 summit begins today in Indonesia Bali : PM Modi to attend : பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி 20 கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு இந்தோனேஷியாவில் இன்று தொடங்குகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.

சர்வதேச அளவில் ஜி 20 கூட்டமைப்பு முக்கியப் பங்கு (At the international level, the G20 alliance plays an important role) வகித்து வருகிறது. உலகின் சுமார் 85 சத வீத பொருளாதார மதிப்பையும், சுமார் 75 சதவீத வர்த்தகத்தையும், சுமார் 65 சதவீத மக்கள் தொகைபையும் ஜி 20 கூட்டமைப்பு நாடுகளே கொண்டுள்ளன. அந்நாடுகள் எடுக்கும் முக்கிய முடிவுகள், சர்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். பிரதமர் மோடி, அதிபர் ஜோ டைன், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி கனக், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஜெர்ம‌னி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

உக்ரைன் மீதான போர் நெருக்கடி காரணமாக ரஷிய அதிபர் விளா திமீர் புதின் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை (Russian President Vladimir Putin did not attend the conference). சர்வதேச பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து ஜி 20 மாநாட்டில் விவாதிக்கப் பட உள்ளது. முக்கியமாக, சர்வ தேச அளவில் உணவுப் பாதுகாப்பையும் எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக் கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள‌து.

இந்தோனேஷியா நாட்டின் பாலியில் நடைபெறும் இந்த மாநாட்டின் போது முக்கியத் தலைவர்கள் பலரை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs) தெரிவித்துள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, திங்கள்கிழமை மாலை பாலியை அடைந்தார்.