Special express trains to Kollam via Tamil Nadu : தமிழகம் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்

பெங்களூரு: For the convenience of devotees going to Sabarimala, special express trains to Kollam via Tamil Nadu : சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக பெலகாவி முதல் தமிழகம் வழியாக கொல்லம் வரை, பின்வரும் சிறப்பு ரயில்களை கீழ்க்கண்டவாறு இயக்க தென் மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில் எண். 07357/07358 பெலகாவி – கொல்லம் – பெலகாவி சிறப்பு எக்ஸ்பிரஸ் (Belagavi – Kollam – Belagavi Special Express) (1 பயணம்): ரயில் எண். 07357 பெலகாவி – கொல்லம் சிறப்பு விரைவு ரயில் பெலகாவியில் இருந்து நவம்பர் 20 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு புறப்படும். மறுநாள் மதியம் 03.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறு திசையில், ரயில் எண். 07358 கொல்லம் – பெலகாவி சிறப்பு விரைவு நவம்பர் 21 ஆம் தேதி மாலை 05:10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11:00 மணிக்கு பெலகாவியை சென்றடையும்
இந்த சிறப்பு ரயில்கள் கானாபூர், லோண்டா, தார்வாட், எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி, எஸ்எம்எம் ஹாவேரி, ராணிபென்னூர், தாவணகெரே, பிரூர், அரிசிகெரே, திப்தூர், தும்குரு, எலஹங்கா, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை, காயங்குளம், சாஸ்தான்கோட்டா ஆகிய ரயில் நிலையங்களில் இரு திசைகளிலும் நிறுத்தப்படும்.
சிறப்பு ரயில்களில் ஒரு ஏசி-2 அடுக்கு, எட்டு ஏசி-3 அடுக்கு, ஒன்பது ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் ஜெனரேட்டர் கார்களுடன் கூடிய இரண்டு லக்கேஜ் மற்றும் பிரேக்-வேன்கள் (மொத்தம் 20 பெட்டிகள்) என இருக்கும்.

ரயில் எண். 07359/07360 எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி – கொல்லம் – எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளி
சிறப்பு எக்ஸ்பிரஸ் (SSS Hubballi – Kollam – SSS Hubballi Special Express) (1 பயணம்):ரயில் எண். 07359 எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளி – கொல்லம் சிறப்பு விரைவு நவம்பர் 27 ஆம் தேதி மதியம் 02:40 மணிக்கு ஹூப்பள்ளி எஸ்எஸ்எஸ்ஸில் இருந்து புறப்படும். மறுநாள் 03.15 மாலை கொல்லம் சென்றடையும், திரும்பும் திசையில், ரயில் எண். 07360 கொல்லம் – எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளி சிறப்பு விரைவு நவம்பர் 28 அன்று கொல்லத்தில் இருந்து மாலை 05:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 08:00 மணிக்கு எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் ஹாவேரி, ராணிபென்னூர், தாவணகெரே, பிரூர், அரிசிகெரே, திப்தூர், தும்குரு, எலஹங்கா, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை, காயங்குளம், சாஸ்தான்கோட்டா ஆகிய நிலையங்களில் நின்று, செல்லும்.

ரயில் எண். 07361/07362 பெலகாவி – கொல்லம் – பெலகாவி சிறப்பு எக்ஸ்பிரஸ் (Belagavi – Kollam – Belagavi Special Express) (7 பயணங்கள்): ரயில் எண். 07361 பெலகாவி – கொல்லம் சிறப்பு விரைவு ரயில் 2022 டிசம்பர் 4 முதல் 2023 ஜனவரி 15 வரை (7 பயணங்கள்) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11:30 மணிக்கு பெலகாவியில் இருந்து புறப்படும். அடுத்த நாள் மதியம் 03:15 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். திருப்பும் திசையில், ரயில் எண். 07362 கொல்லம் – பெலகாவி சிறப்பு விரைவு ரயில் 5 டிசம்பர் 2022 முதல் 2023 ஜனவரி 16 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 05:10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும். அடுத்த நாள் இரவு 11:00 மணிக்கு பெலகாவியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் கானாபூர், லோண்டா, தார்வாட், எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி, எஸ்எம்எம் ஹாவேரி, ராணிபென்னூர், தாவணகெரே, பிரூர், அரிசிகெரே, திப்தூர், தும்குரு, எலஹங்கா, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை, காயங்குளம், சாஸ்தான்கோட்டா ஆகிய ரயில் நிலையங்களில் இரு திசைகளிலும் நின்று, செல்லும்.
மேலே குறிப்பிடப்பட்ட ரயில்களில் (07359/07360 மற்றும் 07361/07362) ஒரு ஏசி-2 அடுக்கு, இரண்டு ஏசி-3 அடுக்கு, பத்து ஸ்லீப்பர் கிளாஸ், இரண்டு இரண்டாம் வகுப்பு லக்கேஜ் மற்றும் பிரேக்-வேன்கள்/மாற்றுத்திறனாளிகளின் நட்பு பெட்டி ஆகிய 15 பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.