Monkeypox in America : அமெரிக்காவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு: அந்நாட்டின் தேசிய தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தகவல்

அமெரிக்கா: First case of monkey pox in America : அமெரிக்காவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் குரங்கு அம்மையின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் ஒரு கைக்குழந்தைக்கும், வேறு நாட்டை சேர்ந்த மேலும் ஒரு கைக்குழந்தையும் குரங்கு அம்மையால் (monkey pox ) பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டின் தேசிய தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் துணைத் தலைவர் ஜெனிஃபர் மெக்குயின் தெரிவித்துள்ளதாவது: ஐரோப்பாவில் உள்ளிட்ட மற்றப் பகுதிகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது (monkey pox spreading fast). இதில் பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.தற்போது அமெரிக்காவில் 2 குழந்தைகளுக்கு குரங்கு அம்மையின் தாக்கம் உள்ளது. இவர்களுக்கு நோய் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பதனை கண்டறிந்து வருகிறோம்.


அமெரிக்காவில் குரங்கு அம்மையின் தாக்கத்தை எதிர்பார்த்திருந்தோம். எங்களிடம் 3 லட்சம் குரங்கு அம்மை தடுப்பூசி இருப்பில் (Vaccine is available) உள்ளது. விரைவில் அமெரிக்காவில் உள்ள ஒரு லட்சம் பேருக்கு குரங்கு அம்மை தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை பாதிப்பு கேரள மாநிலத்தில் (Kerala state)2 பேருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு குரங்கு அம்மை பாதிப்பு பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குரங்கு அம்மை பாதிப்பு கேரளத்தில் ஏற்பட்டுள்ளதால் அதன் அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகத்தில் குரங்கு அம்மை பாதிப்பை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.