Salman Rushdie : நியூயார்க்கில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து

அப்போதைய ஈரானில் தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி. சல்மான் ருஷ்டிக்கு எதிராக ஆணை பிறப்பித்தார். அதில் சல்மான் ருஷ்டியின் தலைக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டது.

நியூயார்க் : Famous writer Salman Rushdie stabbed in New York : புகழ்பெற்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் காயமடைந்த சல்மான் ருஷ்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நியூயார்க்கில் உள்ள சௌதாகுவா கவுண்டியில் வெள்ளிக்கிழமை (Friday in Chautauqua County) இலக்கிய கருத்தரங்கு நடைபெற்றது. இந்த‌ நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தப் போது, அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார். அவர் தாக்கப்பட்டதையடுத்து, அவருக்கு உதவ அங்கு கூடியிருந்த மக்கள் விரைந்து செல்வதை சமூக ஊடக தளங்களில் வீடியோ காட்சிகள் காண்பிக்கின்றன. தாக்குதலில் சல்மான் ருஷ்டியின் கழுத்துப் பகுதியில் காயமேற்பட்டது. இதனையடுத்து ருஷ்டிக்கு மேடையிலேயே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்த மருத்துவமனை ஒன்றிக்கு சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். ருஷ்டியை தாக்கிய அந்த நபரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சல்மான் உடல் நிலை குறித்து எந்த தகவலும் இது வரை கிடைக்கப் பெறவில்லை. ஆனால் அவரது உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறிதாக கூறப்படுகிறது. பல எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த நிகழ்வைக் கண்டித்துள்ளனர். சல்மான் ருஷ்டி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இந்தியாவின் மும்பையில் (Salman Rushdie was born in Mumbai) பிறந்தவர். சல்மான் ருஷ்டி முதன்முதலில் அவரது நாவலான “மிட்நைட் சில்ட்ரன்” மூலம் பிரபலமடைந்தார், இந்த புத்தகம் 1981 இல் புக்கர் பரிசை வென்றது. ஆனால் 4 வது புத்தகமான அவரது பெயர் “சாத்தானின் வசனங்கள்” பிறகு உலகம் முழுவதும் அறியப்பட்டது. இப்புத்தகம் 1988 ஆம் ஆண்டு முதல் ஈரானில் தடைசெய்யப்பட்டுள்ளது. அப்போதைய ஈரானில் தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி. சல்மான் ருஷ்டிக்கு எதிராக ஆணை பிறப்பித்தார். அதில் சல்மான் ருஷ்டியின் தலைக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டது. ஏனெனில் அந்த புத்தகத்தில் தெய்வ நிந்தனை செய்யப்பட்டுள்ளதாக பல இஸ்லாமியகர்கள் கருதினர். இதனைத் தொடர்ந்து ருஷ்டி 9 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். சர்வதேச அரசியலில் நிலவரங்கள் மாறி உள்ளன. என்றாலும் சல்மான் ருஷ்டி மீது உள்ள எதிர்ப்பு உணர்வு இன்னும் மாறவில்லை என்பதனை இந்த தாக்குதல் நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

தற்போது நியூயார்க்கில் வசிக்கும் சல்மான் ருஷ்டி, பேச்சு சுதந்திரத்தை ஆதரிப்பவர், குறிப்பாக 2015 இல் பாரிஸில் இஸ்லாமியர்களால் அதன் ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் பிரெஞ்சு நையாண்டி பத்திரிகையான சார்லி ஹெப்டோவின் (Charlie Hebdo) வலுவான பாதுகாப்பைத் தொடங்கினார். இருப்பினும் தற்போது வரை ருஷ்டி கலந்து கொள்ளும் இலக்கிய நிகழ்வுகளுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் மற்றும் புறக்கணிப்புகள் தொடர்கின்றன. மேலும் 2007 இல் அவரது நைட்ஹூட் ஈரான் மற்றும் பாகிஸ்தானில் எதிர்ப்புகளைத் தூண்டியது. அங்கு அமைச்சர் பதவி ஒருவர் தற்கொலை குண்டு வெடிப்புகளை நியாயப்படுத்தினார். இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.