corbe vox Booster Vaccination : கோர்பிவேகஸ் பூஸ்டர் தடுப்பூசி தவணை செலுத்துவது தொடக்கம்

சென்னை: corbe vox Booster Vaccination is the start : தமிழகத்தில்கோர்பிவேகஸ் பூஸ்டர் தடுப்பூசி தவணையாக செலுத்தும் பணியை அமைச்சர் மா.சுப்ரமண்யன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவிகளின் வேதியியல் உள்ள கண்காட்சியை பார்வையிட்டு , கோர்பிவேகஸ் பூஸ்டர் தடுப்பூசி தவணையை செலுத்தும் பணியை தொடக்கி வைத்து அவர் பேசியது: கோர்பிவேகஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி (The central government has granted permission) உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் படி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, தமிழகம் முழுவதும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடக்கப்பட்டது. தமிழகத்தில் கரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி ஒரு மாபெரும் இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 18 வயதிற்கும் மேல் 89.41 சதம் பேர் இரண்டாம் தவணை செலுத்திக் கொண்டுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் கரோனா மையங்களில் இதுவரை 12.13 கோடி தடுப்பூசிகள் மொத்தமாக செலுத்தப்பட்டுள்ளது. 50 லட்சத்திற்கும் அதிகமான பூஸ்டர் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 33 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன (33 special corona vaccination camps are being conducted). அரசு மையங்கள் மூலம் 60 வயதிற்கும் மேற்பட்டோர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு (On the occasion of India’s 75th Independence Day), 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியை 75 நாள்களுக்கு அரசு மையங்களில் செலுத்தும் பணி கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்டு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களுக்கு பிறகு கோர்பிவேக்ஸ் தடுப்பூசி பூஸ்டர் தவணையை செலுத்திக் கொள்ளலாம். கரோனாவை மாநிலத்தில் முழுமையாக தடுக்க அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். இதில் தயக்கம் காட்டத் தேவையில்லை என்றார்.