Chinese spy vessel arrives in Sri Lanka: இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக் கப்பல்

கொழும்பு: Chinese spy vessel Yuan Wang 5 arrives in Sri Lanka: சீன ஆராய்ச்சி மற்றும் உளவு கப்பல் யுவான் வாங் -5 இன்று காலை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பல் செயற்கைக்கோள்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது. சீனாவினால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்த ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல் கடந்த 11ம் தேதியே நிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இதற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்ததையடுத்து கப்பல் நிறுத்துவதற்கு இலங்கை அரசு ஒத்திவைத்தது.

யுவாங் வாங் 5 கப்பலின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் தெரிவித்துள்ளதாக இலங்கை உறுதிப்படுத்தியது. கப்பலை நிறுத்துவதற்குத் தேவையான உதவிகளையும் நேர்மறையான பரிசீலனைகளையும் வழங்குமாறு சீனத் தூதரகம் இலங்கை அரசாங்கத்திடம் ஆகஸ்ட் 12ம் தேதி கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து சீனத் தூதரகம் இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், யுவான் வாங்-5 கப்பல் ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 22 வரை நிரப்புதல் நோக்கங்களுக்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய அனுமதி கோரப்பட்டது. இலங்கையின் முடிவைத் தொடர்ந்து, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை இரு நாடுகளும் பொதுவான நலன்களைப் பூர்த்தி செய்வதாகவும், எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்கவில்லை என்றும் சீனா கூறியிருந்தது.

இந்தியா வெளிப்படுத்திய எதிர்ப்பைத் தொடர்ந்து கொழும்பு இந்த முடிவை எடுத்ததாக வெளியான தகவல்களில், பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டி, இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்றும் சீனா தெரிவிந்திருந்தது.

இந்நிலையில், இன்று சீனாவின் ஆராய்ச்சி கப்பலான யுவான் வாங்-5 இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி கப்பலான யுவான் வாங்- 5 கடந்த 2007ம் ஆண்டு கட்டப்பட்டது. இது11,000 டன்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. சீனக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக இருக்கும் கடற்படுக்கையை வரைபடமாக்கும் திறன் கொண்டதால் இலங்கைத் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா தனது பாதுகாப்புக் கவலைகளை வெளிப்படுத்தியது. இந்தக் கப்பல் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்குப் பகுதியில் செயற்கைக்கோள் ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம். இதனால் இந்தியாவுக்கு பாதுகாப்புக் கவலையைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவிடமிருந்து அதிக வட்டிக்கு இலங்கை கடன் வாங்கியதால், அதனை அடைக்க இலங்கை அரசு போராடியதைத் தொடர்ந்து துறைமுகம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு சீன வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.