Bangladesh fire: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தின் சிட்டகாங் நகருக்கு வெளியே 40 கி.மீ. தொலைவில் கதம்ரசூல் பகுதியில் தனியார் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது.
இந்த கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போது கிடங்கில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட சுமார் 450 பேர் படுகாயமடைந்தனர். இந்த தீ விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது என இன்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தஎண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். ரசாயன எதிர்வினையின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தில் காயம் அடைந்தவர்களில் 350 பேர் சிட்டகாங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மற்ற மருத்துவமனைகளில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
Bangladesh fire: Over 44 killed, hundreds injured in depot blast
இதையும் படிங்க: Web Series Suzhal: `சுழல்’ வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இதில் விளம்பரம் செய்ய ஒன்பது ஒன்பது நான்கு நான்கு ஒன்று எட்டு நான்கு ஐந்து நான்கு ஒன்பது என்ற நம்பரை தொடர்புக்கொள்ளலாம்.



