செயல்பாட்டுக்கு வந்தது தானியங்கி விற்பனை இயந்திரம்

manjapai
செயல்பாட்டுக்கு வந்தது தானியங்கி விற்பனை இயந்திரம்

Automatic Vending Machine: சென்னை கோயம்பேட்டில் உள்ள பூ மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மஞ்சள்பை தானியங்கி இயந்திரத்தை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான நெகிழி பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நெகிழி பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ‘மீண்டும் மஞ்சள்பை’ திட்டம்’ தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோயம்பேடு மார்க்கெட்டில் தானியங்கி இயந்திரம் மூலம் 10 ரூபாய் செலுத்தி மஞ்சள்பை பெறும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

பூ மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மஞ்சள்பை தானியங்கி இயந்திரத்தை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: Web Series Suzhal: `சுழல்’ வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இதில் விளம்பரம் செய்ய ஒன்பது ஒன்பது நான்கு நான்கு ஒன்று எட்டு நான்கு ஐந்து நான்கு ஒன்பது என்ற நம்பரை தொடர்புக்கொள்ளலாம்.