Auto driver from Kerala wins Rs 25 crore : ஆட்டோ ஓட்டுநருக்கு லாட்டரியில் ரூ. 25 கோடி பரிசு

திருவனந்தபுரம்: Auto driver-cum-chef from Kerala wins Rs 25 crore Onam bumper lottery : அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும் கைகொடுக்கும் என்பதற்கு இந்த கேரள லாட்டரி ஆட்டோ டிரைவர்தான் இதற்கு சான்று. வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தவருக்கு ஓணம் லாட்டரியாக மகாலட்சுமி தானே வீட்டிற்கு வந்துள்ளார். கேரள அரசின் ஓணம் லாட்டரியில் ஆட்டோ டிரைவர் அனூப் என்பவர் ரூ.25 கோடி வென்றார். அதன் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரரானார்.

திருவனந்தபுரம் ஸ்ரீவரஹத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் (Auto Driver Anoop), ஒரு நாள் முன்பு வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​திருவனந்தபுரம் கணபதி கோயில் அருகே உள்ள கடையில் லாட்டரி சீட்டு வாங்கினார். டிக்கெட் விலை ரூ. 500 மற்றும் அதன் எண் TJ 750605. கடும் வறுமையில் இருந்த அனூப், மகள் சேமித்து வைத்திருந்த பணப்பெட்டியில் இருந்து 500 ரூபாயை எடுத்து வந்து டிக்கெட் வாங்கினார். தற்போது இந்த லாட்டரியில் இருந்து ஒரே நாளில் கோடீஸ்வரராக வலம் வந்து கேரளா மட்டுமின்றி நாடு மற்றும் வெளிநாடுகளிலும் பிரபலமாகி உள்ளார்.

3 Lakh Loan Application: இந்நிலையில், மலேசியாவில் சமையல்காரராக பணிக்கு செல்ல அனூப் திட்டமிட்டிருந்தார். அதற்காக வங்கியில் 3 லட்சம் ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை வாங்கப்பட்ட லாட்டரியில் 25 கோடி ரூபாய் வென்றது தெரிந்தது.

தற்போது அனூப்புக்கு கடன் தேவையில்லை. இப்போது அனைத்து வரிகளையும் கழித்து ரூ. 25 கோடி லாட்டரி பணத்தில் 15 கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கும். வீடு கட்டி, கடனைத் தீர்த்து வசதியாக இருக்கப்போவதாக‌ அனூப் தெரிவித்தார் (Anup said that he will build a house and settle the debt and be comfortable). இதுதவிர உறவினர்களுக்கு உதவி செய்வதாகவும், சில தொண்டு பணிகளையும் செய்வதாகவும் அனூப் தெரிவித்துள்ளார். மலேசியாவுக்குப் பதிலாக கேரளாவில் ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக‌ அனூப் ஊடகங்களிடம் தெரிவித்தார். கேரளாவில் லாட்டரி விற்பனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது..

0