Darshan after 19 hours in Tirupati: திருப்பதியில் குவிந்த பக்தர்கள்; 19 மணி நேரத்திற்குப்பின் தரிசனம்

திருப்பதி: Devotees flock to Tirupati and have to wait for 19 hours to get free darshan. புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் பக்தர்கள் குவிந்து வருவதால் இலவச தரிசனம் செய்ய 19 மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் திருப்பதியும் ஒன்று. இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.

திருப்பதி பிரம்மோற்சவம் புகழ் பெற்ற கோவில் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்கின்றன. திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் ‘ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்’ (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்பினாலும், மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்களை ஒலிபரப்புகிறார்கள்.

இந்நிலையில், திருமலை, பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.

தமிழக பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு முறை ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும், எனக் கருதுகிறார்கள். இதனால், ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ திருப்பதிக்கு வருகிறார்கள். வருகிற 27-ந்தேதி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையை நோக்கி பாதயாத்திரையாக வருகின்றனர்.

மேலும் விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருமலையில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாமி தரிசனத்துக்காக காத்திருந்தனர். நேற்று ஏழுமலையானை தரிசிக்க 19 மணி நேரத்திற்குப்பின் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.