Indian Student Murdered : அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்

இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் அமெரிக்காவில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்

வாஷிங்டன்: (Indian Student Murdered ) அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ‘பர்டூ யுனிவர்சிட்டி’ மாணவரான இவர், அமெரிக்காவின் இந்தியானா வளாகத்தில் உள்ள விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை நண்பர் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் போலீசார் ஒருவ‌ரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருண் மனிஷ் சேடா (Varun Manish Cheda) (20 வயது) என்பவர் உயிரிழந்த மாணவர் ஆவார். அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தின் இந்தியானா வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இந்திய மாணவர் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறைக்கு தெரிவந்துள்ளது. இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனக்கு அனுமதித்தனர். பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் இது கொலைதான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாணவரின் மரணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வருண் மனிஷ் சேடாவின் அறை தோழர் இந்த கொலையை செய்துள்ளார், கொரியாவை சேர்ந்த ஜி மின் ஜிம்மி ஷா (Ji Min Jimmy Shah from Korea) (22 வயது) என்பவர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கொரியாவைச் சேர்ந்த ஜூனியர் சைபர் செக்யூரிட்டி மேஜரும் சர்வதேச மாணவருமான ஜிம்மி ஷா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை மதியம் 12:45 மணியளவில், ஜிம்மி ஷா, மனிஷ் சேடா மரணம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

ஆனால், வருண் மனிஷ் சேடா ஏன் கொல்லப்பட்டார் என்பது இதுவரை வெளியாகவில்லை. மர்ம மரணத்தை கொலையாக கருதி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் (Police are still investigating). போலீஸ் விசாரணைக்கு பின்னரே உண்மை வெளிவரும்.