Assembly elections along with parliamentary elections: நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல்- பாஜக துணைத்தலைவர் உறுதி

நாமக்கல்: Assembly elections along with parliamentary elections. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறும் என பாஜக துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட பாஜ அலுவலகத்தில் நகர, ஒன்றிய பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் வடிவேல், செயலாளர் மகேஸ்வரன், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சியாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாநில துணைத்தலைவரும், மாவட்ட பொறுப்பாளருமான வி.பி.துரைசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

கூட்த்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், திமுக அரசு அனுமதி மறுத்தது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். வருகிற நவ.6ம் தேதி ஊர்வலம் நடத்தலாம் என்றும், அதற்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்ரவிட்டுள்ளது. திமுக கட்சியின் ஒரு அணியாக செயல்படும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக கட்சியினர் தமிழகத்தில் மத நல்லினக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர். அவர்கள் கூட்டணி கட்சியினரே இப்படி கூறுவதற்கு காரனம், திமுகவின் தூண்டுதல்தான். தமிழகத்தில் மத நல்லினக்கம் நல்ல முறையில்தான் உள்ளது. அதனால்தான் முஸ்லிம்களும், கிறித்தவர்களும் பாஜகவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு பாஜவில் உறுப்பினராக இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதாக கூறி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாச்சாரம் பரவுவது வாடிக்கை விட்டது.

நான் திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, கட்சித் தலைமையின் போக்கு பிடிக்கால் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன். தற்போது மற்றொரு துணை பொது செயலாளர் மொடக்குறிச்சி சுப்புலட்சுமி கட்சியில் இருந்து விலகி உள்ளார். இச்சம்பவம், திமுகவின் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் உள்ள தொடர்பு குறைந்து வருவதைக் காட்டுகிறது. வரும் 9ம் தேதி திமுக தலைவர் தேர்தல் நடந்தவுடன் அக்கட்சியில் இருந்து மேலும் பலர் வெளியில் வரத் தயாராக உள்ளனர்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அவர் 5 ஆயிரம் கோடி பணத்தை அங்கு முதலீடும் செய்ய சென்றுள்ளதாக மன்னார்குடி திமுக எம்எல்ஏ ராஜா தெரிவித்துள்ளார். அவர் மீது பாஜக சார்பில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும். ஓட்டு வங்கிக்காக ஆன்மீக அரசியல் பேசும் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலில் விநாயகர் சதுர்த்திக்கும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கும், தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கும் தமிழக மக்களுக்கு வாழ்த்து கூறட்டும். இந்து மதத்தைப் பறிற அவதூறாக பேசிய அவரது கட்சியைச் சேர்ந்த ஏ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கட்டும்.

கடந்த 8 ஆண்டுகளில் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி வல்லரசு நாடுகளின் பட்டியலில் பிரதமர் மோடி சேர்த்துள்ளார். இதை சர்வதேச நாடுகள் பாராட்டி வருகின்றன. இந்த நிலையில் வருகிற 2024ம் ஆண்டு பார்லி தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் நடைபெறும்போது தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றால் நான் பொறுப்பல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறியுள்ளார். இருப்பினும், இந்த பார்லி தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. தேர்தல் முடிந்தவுடன் 3வது முறையாக பாரத பிரதமராக மோடியும், தமிழக முதல்வராக முதன்முறையாக பாஜக தலைவர் அண்ணாமலையும் பதவியேற்பது உறுதியாகிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.