Earthquake : நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம், 6 பேர் பலி: டெல்லி, நொய்டா, காசியாபாத் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம்

மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Tajikistan Earthquake Record 6.8 Magnitude

புதுடெல்லி: நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது (An earthquake of 6.3 magnitude occurred in Nepal). நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். இமயமலை நாட்டில் செவ்வாய்க்கிழமை இரவு 8:52 மணியளவில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட பல இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் இரவு 1.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் நிலநடுக்கத்தின் பாதிப்பு சுமார் 10 கி.மீ வரை இருந்த‌தாக தெரிகிறது.

நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தின் கலுகேட்டியில் 10 கி.மீ வரை இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. அதிகாலை 1.57 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தில் அதே இடத்தில் மாலை 3:15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லி, காஜியாபாத், குருகிராம், ஃபரிதாபாத் (Delhi, Ghaziabad, Gurugram, Faridabad) ஆகிய இடங்களில் நிலநடுக்கம் காரணமாக சில வினாடிகள் நிலம் அதிர்ந்தது, தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் (West Bengal, Madhya Pradesh, Uttar Pradesh, Bihar, Jharkhand and Rajasthan) ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் குறித்த தங்களது எண்ணங்களை சமூக வலைதளங்களில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர். 25,000க்கும் மேற்பட்டோர் ட்விட்டரில் நிலநடுக்க ஹேஷ்டேக்கில் ட்வீட் மூலம் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர். இதற்கு முன்பு இதுபோன்ற அனுபவத்தை அனுபவித்ததில்லை என்று பலர் கூறினர். நிலநடுக்கம் கடுமையாக இல்லை என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.