Ilayaraja in the Rules Committee of the Rajya Sabha : மாநிலங்களவையின் விதிமுறைகள் குழுவில் இடம் பெற்றார் இளையராஜா

டெல்லி: Ilayaraja in the Rules Committee of the Rajya Sabha : மாநிலங்களவையின் 9 குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்களை மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மறுசீரமைத்துள்ளார். இதில், விதிமுறைகள் குழுவில் இசையமைப்பாளர் இளையராஜா எம்பி உள்ளிட்ட 15 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும் மாநிலங்களவையின் நெறிமுறை கள் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், உறுதி மொழிக் குழுத் தலைவராக அதிமுக உறுப்பினர் தம்பிதுரையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜகதீப் தன்கர் (Jagdeep Thankar) குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாநிலங்களவைக்கும் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். வரும்ளிர்காலக்கூட்டத்தொடரில், முதன் முறையாக தன்கர் மாநிலங்களவையில் தலைவராக அமர இருக்கிறார். தன்கர் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் மாநிலங்களவையின் பல்வேறு நிலைக் குழுக்களை மறுசீரமைத்து வருகிறார். மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் துறைரீதியாக பொதுவான நிலைக் குழுக்களும், தனித்த த‌னியாக நிலைக் குழுக்களும் உண்டு.

இருப்பினும், துறைரீதியான நிலைக் குழுக்களின் சிலவற்றின் தலைவர்கள் மாநிலங்களவைத் தலைவராலும், சில குழுக்களின் தலைவர்கள் மக்களவைத் தலைவராலும் நியமிக்கப்படுகின்றனர். இதில் மாநிலங்களவை நெறிமுறைகள் குழுத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக உறுப்பினருமான பிரகாஷ் ஜாவடேகர் (Prakash Javadekar) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதில் ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ்), டெரிக் ஓ பிரையன் (திரிணமூல் காங்கிரஸ்), திருச்சி சிவா (திமுக), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி) உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

மாநிலங்களவையின் அன்றாட அலுவல் ஆய்வுக் குழுவின் தலைவராக மாநிலங்களவைத் தலைவரே விளங்குகிறார். 10 உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக கட்சிகள் இடம்பெறவில்லை. மாநிலங்களவையின் உரிமைக் குழு, விதிமுறைகளுக்கான குழுக்களும் மாற்றியமைக்கப்பட்டு இந்த இரண்டுக்கும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங்கே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உரிமைக் குழுவில் ஜிவிஎல் நரசிம்மராவ் (பாஜக), ஜி.கே.வாசன் (தமாகா) உள்ளிட்ட 10 பேரும், விதிகளுக்கான குழுவில் என்.ஆர்.இளங்கோ (திமுக) நியமன உறுப்பினர் இசையமைப்பாளர் இளையராஜா (Nominee member Music composer Ilayaraja) உள்ளிட்ட 15 பேரும் இடம்பெற்றுள்ளனர்.