PM Modi : சவாலான நேரங்களில் இந்தோனேஷியாவிடம் உறுதியான உறவு: பிரதமர் மோடி

இந்தோனேஷியா: A strong relationship with Indonesia in challenging times : சவாலான காலங்களில் இந்தோனேஷியாவுடன் இந்தியாவின் உறவு உறுதியாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக இந்த உறுதி அமைந்தது என்றும் அவர் கூறினார். ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினரிடம் உரையாற்றிய போது ‘ஆபரேஷன் சமுத்ரா மைத்ரி’ (Operation Samudra Maitri) என்ற நடவடிக்கையை இந்தியா 2018-ல் மேற்கொண்டதை நினைவு கூர்ந்தார்.

​​இந்தியாவும் இந்தோனேஷியாவும் 90 கடல் மைல்கள் தொலைவில் இருக்கலாம், உண்மையில் அது 90 கடல் மைல் தொலைவு அல்ல, 90 கடல் மைல்கள் நெருக்கமாக உள்ளோம் (We are 90 nautical miles closer). இந்தியாவில் பிரம்மாண்டமான ராமர் கோவில் உருவாகும் நேரத்தில், இந்தோனேஷியாவின் ராமாயண பாரம்பரியத்தையும் நாங்கள் பெருமையுடன் நினைவு கூருகிறோம் என்றார்.

சில மாதங்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்தோனேஷியாவின் சுதந்திர தினம் இந்தியாவிற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 17 அன்று வருகிறது. ஆனால் இந்தோனேஷியா இந்தியாவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரம் அடையும் அதிர்ஷ்டம் பெற்றது. இந்தோனேஷியாவிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

ஆனால் அதன் 75 ஆண்டுகால நீண்ட வளர்ச்சிப் பயணத்தில், இந்தோனேஷியாவுக்கு இந்தியா கொடுக்கக்கூடியது ஏராளம். இந்தியாவின் திறமை, தொழில்நுட்பம், புத்தாக்கம், தொழில்துறை (India’s talent, technology, innovation, industry) ஆகியவை உலகத்தின் முன் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளன. உலகின் பல பெரிய நிறுவனங்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரியைக் கொண்டிருக்கின்றன என்றார்.