Chennai Super Kings, Mumbai Indians : சிஎஸ்கேயில் 8 வீரர்கள், மும்பை இந்தியன்ஸில் 13 வீரர்கள் விடுவிப்பு

மும்பை: 8 players in Chennai Super Kings team and 13 players in Mumbai Indians have been released: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 8 வீரர்களும், மும்பை இந்தியன்ஸில் 13 வீரர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் வீரர்களின் புதிய ஏலம் நடைபெற உள்ளதால் பல்வேறு அணிகளில் இருந்து பல வீரர்களை அந்தந்த அணிகள் விடுவித்துள்ளன (The respective teams have released).

சிஎஸ்கே அணியில், மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, டெவோன் கான்வே, ருதுராஜ் ஷிவம் துபே, அமபத்தி ராயுடு, மகேஷ் தீக்‌ஷனா, பிரசாந்த் சோலன்கி (Mahesh Deekshana, Prashant Solanki) உள்ளிட்டோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

சிஎஸ்கே அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். டிவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோடர்ன், ஜெகதீஷன், ஹரி நிஷாந்த், பகத் வர்மா (Bhagat Verma) , ஆசிப் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்:

5 முறை ஐபிஎல் கோப்பையை அடித்த மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியில் 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைரன் பொலார்ட், மெரிடித், டேனியன் சேம்ஸ், பேபியன் ஆலன், டைமல் மில்ஸ், சஞ்சய் யாதவ், ஆர்யன் ஜுயல், மயங் மார்கண்டே, முருகன் அஸ்வின் (Murugan Ashwin), ராகுல் புத்தி, அனுமோல் பிரீத், உன்னத்கட், ப‌சில் தம்பி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை அணி தன்னை விடுவித்ததையடுத்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து (IPL cricket match) பொலார்ட் விலகி உள்ளார். கடந்த 2010 முதல் 2021 வரை 13 ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவது எளிதல்ல. ஆனால் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) என்ற சின்னமான உரிமையானது மாற்றத்தின் ஒரு காலகட்டத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக என்னால் விளையாட முடியாவிட்டால், மும்பைக்கு எதிராக விளையாட விரும்பவில்லை. ஒருமுறை மட்டும் மும்பை இந்தியன் கிடையாது, எப்போதும் மும்பை இந்தியந்தான்