பப்ஜி மதன்: யூடியூப் மூலம் கோடிக்கணக்கில் வருவாய்

யூடியூப் சேனல்கள் மூலம் பப்ஜி மதன் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதனின் யூடியூப் சேனலுக்கு 8 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

பப்ஜி மதன் கேர்ள் பேன், ரிச்சி கேமிங் ஆகிய யூடியூப் சேனல்களில் பெண்களுடன் மதன் நீண்ட நேரம் ஆபாசமாக உரையாடி இருக்கிறார். இதற்கான ஆதாரங்களையும் போலீசார் திரட்டி உள்ளனர்.

பெண்களை கவரும் வகையிலான இந்த யூடியூப் சேனல்களுக்கு சப்ஸ்கிரைபர்கள் அதிகமாவதற்கு மதனின் மனைவி கிருத்திகா முக்கிய பங்காற்றி உள்ளார்.

சில நேரங்களில் அவரே கிளுகிளுப்பாக பெண்களிடம் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டுள்ளார். யூடியூப் சேனலுக்கான அனைத்து பணிகளையும் கிருத்திகாவே முன் நின்று செய்துள்ளார். யூடியூப் சேனல்களின் அட்மினாகவும் அவர் இருந்துள்ளார்.