சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

சென்னை மெட்ரோ ரயிலின் அனைத்து வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டத் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை – விம்கோ நகா் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கவுள்ளது. இதையடுத்து, அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இலவசமாக பயணம் (Free Travel) செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.