நடிகை யாஷிகா தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.
யாஷிகா சுய நினைவுக்கு வந்த பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என போலிஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்து நடந்த அந்த காரில் இவர்கள் இருவரைத் தவிர இரண்டு ஆண்கள் இருந்ததாகவும், அவர்கள் யார் என்பது வெளியே வரவே இல்லை என்றும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படவே இல்லை என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நடிகை யாஷிகா மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரணவார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது உடலநலம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது



