இன்று உலக நுரையீரல் புற்றுநோய் தினம் !

உலகம் முழுவதும் ஆக்ஸ்ட் 1 ம் தேதி நுரையீரல் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தில் International Respiratory Societies (FIRS),நுரையீரல் புற்றுநோய் ஆபத்து காரணிகளைப் பற்றி அதிக விழிப்புணர்வு மற்றும் ஆரம்பகால ஸ்கிரீனிங் போன்றவற்றை மக்களுக்கு அறிவுறுத்திவருகிறது.

உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி நுரையீரல் புற்றுநோய் 5 ல் 1 புற்றுநோய் இறப்புக்கு காரணமாக இருந்து வருகிறது என்று தெரிவிக்கிறது.மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் பற்றி அதிகமாக பேசுவதைப் போன்று நுரையீரல் புற்றுநோய் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை.

பெரும்பாலும் 80 சதவிகிதம் நுரையீரல் புற்றுநோய்க்கான காரணியாக இருப்பது புகைபிடித்தல்.மேலும் சில காரணிகளாக இருப்பது வெளிப்படும் ரேடான், ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக், பெரிலியம் மற்றும் யுரேனியம் போன்றவைகளும் சுற்றுச்சூழல் வெளிப்பாடு காரணமாக நுரையீரல் புற்றுநோயுடன் இணைக்கப்பட்டுள்ளது.

புகைபிடித்தல் புற்றுநோய்க்கு முதல் காரணம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.புகைப் பிடிக்காதவராக இருந்தாலும்கூட புகைப் பிடிப்பவரின் உடன் இருந்தால் அந்த புகையை சுவாசிக்கும் நபருக்கும் புற்றுநோய் வரும் அபாயம் மிக அதிகம்.

நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள்,இருமல் மிகவும் மோசமடைவது,நாள்பட்ட இருமல்,இருமலில் ரத்தம் வருவது,முதுகு அல்லது தோள்களில் வலி இருப்பது போன்றவை.
திடீரென ஏற்படும் மூச்சுத் திணறல்,எடை இழப்பு,நீங்கள் சோர்வாக அல்லது பலவீனமாக இருப்பதாக உணர்வது போன்றவை ஆரம்பகால அறிகுறிகள்.