குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று !

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.இது குழந்தைகளின் சட்டவிரோத வேலைவாய்ப்பு நடைமுறை குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதையும், அதை முற்றிலுமாக நீக்குவதர்காவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஐ.எல்.ஓ (பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால்) மற்றும் யுனிசெப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, குழந்தைத் தொழிலாளர்கள் உலகளவில் 160 மில்லியனாக உயர்ந்துள்ளனர் என்று கூறுகிறது.மேலும் இது கடந்த 20 ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கிறது.

மேலும் இந்த குழந்தை தொழிலாளர்களில் எண்ணிக்கை உலகளவில் 160 மில்லியனாக உயர்ந்துள்ளது மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் 8.4 மில்லியன் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டநிலையில் பல லட்சம் கணக்கான குழந்தைகளில் வாழ்வுடைமை பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.