பெண்கள் பீடி குடிக்கும் போட்டி

smoking festival
பெண்கள் பீடி குடிக்கும் போட்டி

பெண்களுக்காக நடத்தப்பட்ட பீடி ஊதும் போட்டி காண்போரை ஆச்சரிய அதிர்ச்சி அடையச் செய்தது. இது வளரும் குழந்தைகளிடையே பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப உறவுகளை வலுப்படுத்த பல்வேறு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் நவீன கால விளையாட்டுக்கள் வரை இன்றைய காலத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதில் முற்றிலும் மாறுபட்டதாக பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட பீடி ஊதும் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்துகொண்டனர். அதில் விரைவாக பீடி இழுத்து ஊதி முடித்த பெண் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்போது எங்கு எப்போது நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்து சிறுவர், சிறுமிகள் கெட்டு போக வாய்ப்புள்ளது என்று கூறும் அவரகள் இதுபோன்ற விளையாட்டுகளை அனுமதிக்கக் கூடாது என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விளையாட்டு போட்டி என்பது அடுத்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, யாரையும் கெடுப்பதாக இருக்க கூடாது என்று சமூக ஆர்வலர்கள் பலர் கூறியுள்ளனர்.

புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு