கிங் காங் பட பாணியில் குரங்குடன் காதல் !

கிங் காங் என்ற ஆங்கில படத்தில் குரங்கிற்கு ஒரு பெண்ணுக்கும் இடையில் ஒரு காதல் மிளிரும்.அதே போல் தற்போது சிம்பன்ஸியுடன் ஒரு பெண்ணிற்கு காதல் வந்துள்ளது.

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு பெண்.இவர் அங்குள்ள ஒரு மிருகக்காட்சிசாலை க்கு தினமும் சென்றுள்ளார்.மேலும் இவர் ஒரு குறிப்பிட்ட சிம்பன்ஸியுடன் அதிக நேரம் செலவிடுவதை மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

மேலும் இவ்விருவரும் மாறி மாறி முத்தங்களை பகிர்ந்துக்கொண்டதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவரை விசாரித்த அதிகாரிகளிடம் அந்த பெண் கூறியது,நான் சித்தாவை நேசிப்பதாகவும், அவனும் என்னை நேசிப்பதாகவும் கூறினார். நாங்கள் இனிமேல் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட அந்த அதிகாரிகள் மிருகக்காட்சி சாலைக்கு இனி அவர் வரக்கூடாது என்று தடை விதித்து விட்டனர். இதனால் அப்பெண் கண்ணீருடன் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.