சென்னையில் பிரபல நகைக்கடையில் தீ விபத்து !

சென்னை, பாரிமுனையில் உள்ள பூக்கடை பகுதியில் பிரபல பாத்திமா ஜுவல்லர்ஸ் நகைக்கடை உள்ளது.இன்று இந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மேலும் பிற்பகல் 1 :30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்தது. கடை முழுவதும் விரைவாக பரவி தீ காரணமாக கடை முழுவதும் எரிந்துள்ளது.தகவல் அறிந்து அங்கு வந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் .

சம்பவ இடத்துக்கு வந்துள்ள போலீசார் தீ விபத்து ஏற்பட்டதை குறித்து விசாரித்து வருகின்றனர்.தற்போது வரை நடந்துள்ள விசாரணை முடிவில் நகை கடை அமைந்துள்ள கட்டடத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீ பரவியதாக கூறப்படுகிறது.