நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவர்.சமீபத்தில் வெளிவந்த சர்பட்ட பரம்பரை படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.இதில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இவருக்கும் நடிகை சாயீஷா இருவருக்கும் திருமணம் ஆகி சமீபத்தில் பெண் குழந்தைக்கு தந்தை ஆனார்.இந்நிலையில்,திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பண மோசடி செய்ததாக ஆர்யா மீது ஜெர்மனியைச் சேர்ந்த பெண் அளித்த புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா நேரில் ஆஜரானார்.
நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி, 71 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
ஆர்யா நேற்று இரவு 7 மணியளவில் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து சைபர் கிரைம் விங் இன்ஸ்பெக்டர் கீதா முன் ஆஜரானார். சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது.அவர்கள் வழக்கு பதிவு செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.மேலும் புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடந்துள்ளது.



