முதல் படம் கொலைசெய்யப்பட்ட பிரதீப் இரண்டாவது படம் காதலன் சீனிவாசனுடன் இருக்கும் ரோகிணி

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தில் நேற்று காலை மர்மமான முறையில் பிரதீப் 32 வயது என்கின்றவர் இறந்திருந்தார் இதை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக சக்கராயப்பட்டினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் சக்கராயபட்டினா போலீசார் வந்து பார்த்த பொழுது பிரதீப்  இயற்கையாக இறக்க வில்லை எனவும் அவரை கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது இதுகுறித்து பிரதீப்பின் மனைவி ரோகினி பிரதீப்பின் நண்பனாகிய சீனிவாசன்.

இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் இதுகுறித்து மாவட்ட சூப்ரடண்ட் ஆப் போலீஸ் அக்சய்மச்சேந்திரா கூறுகையில் பிரதீப் கட்டிடத் தொழிலாளியாவார் அவருக்கு குடிப்பழக்கம் உண்டு இதேவேளையில் பிரதீப்பின் மனைவி ரோகினியும் அதே பகுதியில் உள்ள அரசு ஒப்பந்த ஊழியராக அரசுத் துறையில் வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ரோகிணிக்கும்   பிரதீபிற்கும்  10 வயதில் ஒரு பெண் குழந்தையும் 7 வயதில் ஒரு ஆண் மகனும் உள்ளனர் இந்த நிலையில் பிரதீப் சீனிவாஸ் என்பவன் இடத்தில் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்   அடிக்கடி பிரதீப்

வீட்டிற்கு சீனிவாஸ்  வந்து சம்பள பணம் கொடுக்க அடிக்கடி வந்த பொழுது ரோகிணி உடன் நெருக்கமாக பழகி இருந்தார் இந்த நிலையில் ரோகிணி உடன் கள்ளக்காதலும் ஏற்பட்டது குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த பிரதீப்பை ஏமாற்றி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரதீப் வீட்டிற்கு ரோகிணியை சந்திக்க சீனிவாஸ் வீட்டுக்கு வந்துள்ளான் குடிபோதையில் இருந்த பிரதீப்பிடம் சீனிவாஸ் மற்றும் ரோகினி இருவரும் சேர்ந்து நீ உனது மனைவிக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும் எனக் கோரியும் இல்லையென்றால் நாங்கள்

இருவரும் தனித்து வாழ உள்ளதாகவும் சீனிவாஸ் தெரிவித்துள்ளான் இதற்கு மறுத்த பிரதீபுக்கும் சீனிவாசுக்கும் அடிதடி தகராறு  ஏற்பட்டுள்ளது இந்த தகராறில் பிரதீப்பும் மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்த பொழுது அதற்கு முன்பாகவே தனது இரண்டு குழந்தைகளையும் பக்கத்து வீட்டிற்கு டி வி பார்ப்பதற்கு மனைவி ரோகினி அனுப்பி இருந்தாள் இந்நிலையில் ரோகினியும் சீனிவாசனும் சேர்ந்து பிரதீப்பை கொல்ல முயற்சி செய்தனர் இந்நிலையில்

முதலில் ஒரு துண்டை வைத்து   வாயையும் மூக்கையும் அடைத்து கொள்ள முயற்சி செய்தனர் ஆனால் இது வெளியே சத்தம் வரும் என்பதால் உடனடியாக ரோகிணியின் சுடிதார் வேல் மூலம் பிரதீப்பின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டனர் இந்த நிலையில் அந்த டவலில் மற்றும் சீனிவாசன் சட்டையில் சுடிதார் வேலில் ரத்தங்கள் இருந்தது   தெரியவந்துள்ளது இதையடுத்து அன்று இரவுகொலை செய்து விட்டு அன்று இரவு இருவரும் அதே வீட்டிலேயே படுத்து தூங்கி விட்டு அதிகாலையில் எழுந்து சீனிவாஸ் ஒன்றும் தெரியாது போல் தனது வீட்டுக்கு சென்றுவிட்டான்  ரோகிணி தனது கணவன் இயற்கையாக

இறந்துவிட்டதாக நடித்துள்ளளால் இதையடுத்து குழந்தைகளிடம் கேட்ட பொழுது எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை அம்மாவிடம் இரவு வந்து கேட்ட பொழுது அம்மா அப்பா தூங்குவதாக அம்மாவும் கூறியதாக குழந்தைகள் தெரிவித்தனர் இதையடுத்து கள்ளக்காதலுடன் சேர்ந்து ஒன்றாக வாழ்வதற்காக நாடகமாடி கள்ளக்காதலுடன் சேர்ந்து பிரதீப்பை கொலை செய்தது தெரிய வந்துள்ளது அவருடைய கழுத்தில் ரத்த காயங்கள் இருந்ததை வைத்து போலீசார் அங்கு சோதனை   இட்டதில்     

மறுநாள் காலை  கழுத்தில் ரத்தக் காயங்களும் மற்றும் வாயில் ரத்தம் வந்ததை வைத்து போலீசார் ரோகிணியிடம் விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக் கொண்டதாகவும் இதையடுத்து  ரோகிணியையும் சீனிவாசனையும் கைது செய்து சக்கராயபட்னா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கள்ளக்காதல் காரணமாக தற்போது தந்தையை இழந்து அம்மாவும் காதலனும் சிறைச்சாலைக்கு சென்ற நிலையில் குழந்தைகள் மற்றும் அனாதையாக நிற்பதை ஊர்மக்கள் பார்த்து மிகவும் வருத்தம் அடைந்தனர்