நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்தது

cyclone-asani-mariners-fishermen-warned-not-to-go-to-sea
கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் இரவு 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக நிவர் புயலானது கரையை கடந்துள்ளது.

புயலால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக இதுவரை முழு தகவ்ல் இல்லை. எனினும் , விடிந்தபின் தெரியவரும்.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,  புயல் தொடங்கியது முதல் அரசுக்கு மக்கள் முழுமையாக 100 சதவிகிதம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், அவசர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.36 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை கணக்கீடு செய்து  நிவாரணம் மேற்கொள்ளப்படும் என்றும், பயிர் சேதத்திற்கு காப்பீடு, இழப்பீடு பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு வழங்கபடும் என்றும், அமைச்சர் தெரிவித்தார். அதேபோல், மழையினால் உயிரிழப்பு இல்லை என்றும் ஆர்.பி உதயகுமார் குறிப்பிட்டார்.