மக்கள் கவனத்திற்கு..மூன்றாவது அலை தொடக்கம் எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை வெகுவாக உலுக்கியது.கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு வருடத்தை கடந்த பிறகும் அதன் தாக்கம் இன்றும் முழுமையாக குறையவில்லை.

இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது.இருப்பினும் சில நாடுகளில் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது.

தற்போது,மூன்றாவது அலையின் தொடக்கத்தில் உலக நாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் அவர்கள் கூறுவது,டெல்டா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் கொரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளன. டெல்டா வைரஸ் தற்போது உலகில் 111 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.