பிரபல பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி காலமானார் !

பிரபல பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 75 .மேலும் 3 முறை தேசிய விருது வென்ற நடிகை.

இவர் பாலிவுட் படங்கள், பிரபலமான இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சுரேகா சிக்ரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேகா இன்று காலை 8.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவருக்கு இரண்டாவது முறையாக மூளை பக்கவாதம் ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்தார். அவரை குடும்பத்தார் கவனித்து வந்தார்கள்.இவரது மறைவிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.