எப்போது தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டும்?

கொரோனா நோய்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழுவும், கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவும் பரிந்துரை செய்கிறது.

மேலும், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை மாற்றி அமைக்குமாறு தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழுவும், கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவும் பரிந்துரைத்தபடி இந்த மாற்றங்கள் வரவிருக்கிறது.

ஆனால் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியில் எந்த வித மாற்றமும் பரிந்துரைக்கப்படவில்லை.

கொரோனாவிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டவர்கள் 6 மாதங்களுக்கு வாக்சின் போட்டுக் கொள்ளக்கூடாது என்கிறது நிபுணர் குழு.