நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

Weather report
நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

எதிர்பாரத விதமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி விட்டது. ஏனென்றால் ஒரு சில தினங்களுக்கு முன்பு தான் தமிழகத்தை விட்டு வடகிழக்கு பருவமழை விலகியது. வடகிழக்கு பருவமழை விலகியதற்கு பின்னர் தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஆனால் எதிர்பாராத விதமாக தமிழகத்தில் நேற்றைய தினம் பல பகுதிகளில் மழை பெய்தது. அதுவும் குறிப்பாக தென்காசி, உசிலம்பட்டி, கோவில்பட்டி பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.

இந்த நிலையில் இன்று காலையில் கூட சென்னை வானிலை ஆய்வு மையம் வருகிற 30-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதன் வரிசையில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்தப் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு..!