நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் வெப்பநிலையில் லேசாக உயர்ந்ததிருந்தது. ஆனாலும் மற்ற சில மாவட்டங்களில் அதிக அளவில் மழை (Heavy Rainfall) பெய்தது.
சென்னையில், நுங்கம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 37.4 டிகிரி செல்சியஸ் பதிவாகின. அதேபோல மாவட்ட அளவில் வேலூரில் 38.9 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடி 38.6 டிகிரி செல்சியஸ், மற்றும் மதுரை 37 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை பதிவாகின.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுத்துரை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை (Temperature) உயரும் என்று சென்னை பிராந்திய வானிலை மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



