மேட்டூர் அணை 2 நாட்களில் நிரம்ப வாய்ப்பு

மேட்டூர் அணை இரு நாட்களில் நிரம்ப வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்தனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. தீவிரமடைந்த பருவமழையால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 500 கன அடி நீர் வந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி; தற்போதைய நீர்மட்டம் 117 . 61 அடியாக உள்ளது.

நீர் இருப்பு 89.71 டிஎம்சி ஆக இருக்கிறது. அணை நிரம்ப இன்னும் 4 டிஎம்சி நீர் தேவை. நீர் வரத்தில் இதே நிலை நீடித்தால் இரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்க வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும்- தெற்கு ரெயில்வே