என்னது இப்படி ஒரு பரிசா..தனியாக திகில் படங்களை பார்ப்பவருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு !

13 பேய்ப் படங்களை 10 நாட்களில் தனியாக பார்ப்பவருக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு என ஒரு ஃபைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.இது நிஜமா என்கிறீர்களா ஆம் இது நிஜம் தான்.

அமெரிக்காவில் ஒரு நிதி நிறுவனம் அக்டோபரில் 13 பயங்கரமான திரைப்படங்களைப் பார்க்க தனிநபருக்கு $ 1,300 வழங்குவதாக அறிவித்துள்ளது.இது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதா.ஆம் இது நம் தமிழில் வெளிவந்த நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தின் கதை.அதில் நயன்தாரா தனியாக ஒரு படத்தை பார்ப்பார்.

அந்த படத்தில் வருவது போலதான் இந்த அறிவிப்பு இருக்கிறது.ஒரு நபர் தனியாக 13 திகில் படங்களை பார்க்க வேண்டும். பார்க்கும் பொது போது ஃபிட்பிட் (FitBit) உதவியுடன் அவர்களின் இதய ஓட்டம் கணக்கிடப்படும்.இந்த 13 படங்களை 10 நாட்களுக்குள் பார்ப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

இதையும் படிங்க:அன்புமணி ராமதாஸ் மகளின் திருமண வரவேற்பு கொண்டாட்டம்