டிஜிட்டலுக்கு மாறும் வாக்காளர் அடையாள அட்டை

அடுத்தாண்டு முதல் ஆதார் போலவே உங்கள் வாக்காளர் அடையாள அட்டையும் டிஜிட்டல் முறைக்கு மாறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் வேறு இடங்களுக்கு மாறிய வாக்காளர்களுக்கும், புதிய வாக்குச் சாவடிகளில் தங்கள் பெயர்களைச் சேர்க்கவும் இந்த வசதி உதவியாக இருக்கும். இதுதவிர, வாக்காளர் அட்டையை இழந்து புதிய அட்டைக்கு விண்ணப்பித்த வாக்காளர்களும் புதிய அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து கருத்துக் கணிப்புக் குழு இறுதி முடிவை எடுத்தவுடன், அடுத்த ஆண்டு ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு டிஜிட்டல் ஈபிஐசி சேவை கிடைக்கும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்