இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக ஜோ பைடனும் கமலா ஹாரிசும் தேர்வு

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனையும், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிசையும் இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக டைம் இதழ் அறிவித்துள்ளது.

1927-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் டைம் இதழ் ஆண்டின் சிறந்த நபர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில், 1930- ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஆண்டின் சிறந்த நபர் என அறிவிக்கப்பட்டார். பின்னர் 1947- ஆண்டு ஜூன் மாத இதழில் காந்தியின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டது. 1999-ல் 100 ஆண்டுகளில் சிறந்த நபர் யார் என்ற பட்டியலில் இரண்டாவதாக இடம் பிடித்தார் மகாத்மா காந்தி.

இந்நிலையில், இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக ஜோ பைடனும் கமலா ஹாரிசும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அட்டைப் படத்தில் அவர்களது புகைப்படத்தை வெளியிட்ட டைம் இதழ், ‘அமெரிக்காவின் கதையை மாற்றியவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.